முஸ்ஹஃபில் 1-ஆவது சூரா, 7 வசனங்கள், 1-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
1. பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
2. புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
3. (அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்;
4. கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
5. (அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
6. (அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து!
7. (அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர்.
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.