தர்தீல் இலச்சினைதர்தீல்நேரலை வானொலி

சூரா அந்நாஸ்: மூலமும் பொருள்களின் மொழிபெயர்ப்பும்

முஸ்ஹஃபில் 114-ஆவது சூரா, 6 வசனங்கள், 604-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அல்பலக்

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. (நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

2. மக்களின் அரசன்,

3. மக்களின் வணக்கத்திற்குரியவன்,

4. வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

5. அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.

6. (குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.

பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)

மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அல்பலக்