முஸ்ஹஃபில் 97-ஆவது சூரா, 5 வசனங்கள், 598-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. நிச்சயமாக நாம் இதை ‘கத்ர்’ இரவில் இறக்கினோம்.
2. (நபியே!) ‘கத்ர்’ இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
3. ‘கத்ர்’ இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.
4. அதில் வானவர்களும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு (அந்த ஆண்டுக்குரிய அல்லாஹ்வின்) எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்.
5. ஸலாம் (-ஈடேற்றம்) உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)
மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.