தர்தீல் இலச்சினைதர்தீல்நேரலை வானொலி

சூரா அல்காரிஆ: மூலமும் பொருள்களின் மொழிபெயர்ப்பும்

முஸ்ஹஃபில் 101-ஆவது சூரா, 11 வசனங்கள், 600-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அல்ஆதியாத்சூரா அத்தகாஸுர் ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. (உள்ளங்களை) திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.

2. எது திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது?

3. (நபியே!) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

4. அந்நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று இருப்பார்கள்.

5. இன்னும், (அந்நாளில்) மிகவும் மென்மையாக்கப்பட்ட (காற்றில்) பரப்பப்பட்ட கம்பளி ரோமத்தைப் போல் மலைகள் ஆகிவிடும்.

6. ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,

7. அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.

8. ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,

9. அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்.

10. (நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

11. (அது) கடுமையான உஷ்ணமுடைய நெருப்பாகும்.

பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)

மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அல்ஆதியாத்சூரா அத்தகாஸுர் ›